அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் திருக்கோவில்

சிதம்பரம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

final locationAsset 4

இடம்

சிதம்பரம்

final cal;lAsset 5

தொலைபேசி

04144-223813

அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் திருக்கோவில்

சிதம்பரம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

திருவிழாக்கள்

திருவிழா

இத்திருக்கோவிலின் திருவிழா ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று காப்புக்கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கும். 13 நாள் திருவிழாவில் தெருவடைச்சான், காத்தவராயன்-ஆரியமாலா திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கு, தேர் வீதியுலா மற்றும் முக்கிய உற்சவமான பதினோராம் நாள் அன்று தீமிதி உற்சவம் நடைபெறும். அதனடுத்த நாட்களின் விடையாற்றியும் மறுநாள் மஞ்சள் நீர் விளையாட்டுடன் திருவிழா நிறைவு பெரும்.

இந்திருவிழாவில் தீமிதி உற்ச்சவம் சிறப்புவாய்ந்தது. அன்றைய நாளில் அதிகாலயில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையுடம் தொடங்கும் அந்நாளில், பக்தர்கள் தங்கள் உடம்பில் அலகு குத்திக்கொண்டும், செடல் காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் வேண்டிக்கொள்வார்கள். நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்றும், வாதம் முதலான நோய்களிலிருந்து விடுபட வேண்டும் என்றும் வேண்டி பிராத்தனை செய்பவர்கள்  ஆண்  உருவம், பெண் உருவம், கண்கள், இதயம், கைகள், கால்கள், உடலில் ஏதேனும் பிரச்சனைகளோ, நோயோ உள்ளவர்கள், இங்கு அதே போல உருவ அமைப்பாக உள்ள மண்பொம்மைகளாகவும், உருவாரமாகவும் வாங்கி காணிக்கையாக செலுத்தி வழிபட்டு அம்பாளிடம் பிராத்திக்க அந்த நோயை அம்பாள் உடனே குணப்படுத்தி வைக்கிறாள்.

அம்பாளுக்கு புடவை சார்த்தி, அர்ச்சனை செய்து, மாவிளக்கேற்றி வழிபட்டால், தீராத நோயும் தீரும் திருமணத்தடை விலகும். தொட்டில் கட்டி பிரார்த்தித்தால் பிள்ளை வரமும் தந்தருள்வாள். வயிற்றில் மாவிளக்கேற்றி வழிபட்டால் வயிற்றுப்பிணி முற்றிலும் குணமாகும்.

அதேப்போல, பாடைக்கட்டி வழிபடுவதும் இங்கேயுள்ள பிரார்த்தனைகளில் ஒன்று. அன்றைய தினம் பாடை போல் வண்டியை அலங்கரித்து, அதில் பக்தர்கள் படுத்துக்கொண்டு கோயிலை வளம் வந்து அம்பாளை தரிசிப்பார்கள். எந்த நோயால் தவித்து மருகினாலும், அந்த நோயை குணமாக்கி அருள்வதால் இந்த பாடை கட்டி வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

மேலும் அங்கப்பிரதஷணம் என்ற சிறப்பு பிராத்தனையும் இங்கே உண்டு. அங்கம் என்றால் உடம்பு, பிரதஷணம் என்றால் வலம் வருதல் என்று பொருள். பக்தர்கள் தரையில் படுத்து உருண்டு கோயிலை வலம் வருதலே அங்கப்பிரதஷணம் என்பதாகும். இதனால் தங்கள் உடம்பில் உள்ள அணைத்தும் பிணிகள்  நீங்கி உடம்பு வலிமை பெரும் என்று பக்தர்கள் உளமார நம்புகிறார்கள்.

இதனை தொடர்ந்து மதியம் 2 மணியளவில் அக்னி சட்டி எடுத்து வலம் வந்து தீக்குழியில் தீமூட்டுவார்கள். அத்தருணத்திலிருந்து அம்பாள் அக்னி பார்வையுடன் காட்சி தருவாள்

முக்கிய நிகழ்வாக மாலை 5 மணிக்கு மேல் தொடங்கும் தீமிதி நிகழ்ச்சியானது, மக்களை காத்தருளும் அனைத்து சக்திகளையும் ஒன்றினைத்து, சக்தி கரகத்தில் இறக்கி வீதி வலம் வந்து, நாதஸ்வர மேள தாளங்கள் தாரை தப்பட்டை வாசித்திட, பம்பை மற்றும் உடுக்கை ஒலித்திட, ஓம் சக்தி – பராசக்தி எனும் கோஷம் முழங்கிட, படை பரிவாரங்களோடு சக்தி கரகம் முதலில் தீக்குழியில் பரவசத்துடன் இறங்கும். அதுவரை அக்னி பார்வையுடன் காட்சி தந்த அம்பாள், சக்தி கரகம் தீக்குழியில் இறங்கிய பின்னர் சாந்த சொரூபிணியாக காட்சி தருவதுடன் அம்பாளுக்கு நிறுத்தியிருந்த அலகு விலகியிருப்பது கூடுதல் சிறப்பு விசேஷமாகும்.

தொடந்து இரவு 9 மணி வரை நடைபெறும் தீமிதி நிகழ்ச்சியில் இந்நகரின் சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்தும் சுமார் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை அம்பாளுக்கு செலுத்துவார்கள்.
அதனடுத்த நாட்களில் விடையாற்றியும் மறுநாள் மஞ்சள் நீர் விளையாட்டுடன் திருவிழா நிறைவுபெறும்.

இத்திருக்கோயிலில் அன்றைய தினம் சோதனை கரகம் எடுத்து வலம் வந்து அம்பாளுக்கு அலகு நிறுத்துவது சிறப்பு விசேஷமாகும். இதன் மூலம் தீமிதிக்கான ஆயத்த பணிகளை தொடங்க அம்பாள் அருள்பாலித்துள்ளார் என பொருள்.

ஆடி மாத உற்சவ விபரங்கள்

பிரதி ஆடி மாத உற்சவ நாட்கள்
திருவிழா
உற்சவ விபரங்கள்
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை
ஒன்றாம் திருவிழா
காப்புகட்டி கொடியேற்றுதல்
சனிக்கிழமை
இரண்டாம் திருவிழா
அம்பாள் வீதியுலா
ஞாயிற்றுகிழமை
மூன்றாம் திருவிழா
அம்பாள் வீதியுலா
திங்கட்கிழமை
நான்காம் திருவிழா
அம்பாள் வீதியுலா
செவ்வாய்கிழமை
ஐந்தாம் திருவிழா
தெருவடைச்சான் வீதியுலா
புதன்கிழமை
ஆறாம் திருவிழா
அம்பாள் வீதியுலா
வியாழக்கிழமை
ஏழாம் திருவிழா
காத்தவராயன் -ஆரியமாலா திருக்கல்யாணம்/அம்பாள் வீதியுலா
வெள்ளிக்கிழமை
எட்டாம் திருவிழா
அம்பாள் வீதியுலா
சனிக்கிழமை
ஒன்பதாம் திருவிழா
முத்து பல்லக்கு வீதியுலா
ஞாயிற்றுகிழமை
பத்தாம் திருவிழா
தேர் வீதியுலா
திங்கட்கிழமை
பதினோராம் திருவிழா
தீமிதி பெருவிழா
செவ்வாய்கிழமை
பன்னிரென்டாம் திருவிழா
விடையாற்றி
புதன்கிழமை
பதிமூன்றாம் திருவிழா
மஞ்சள் நீர்விளையாட்டு

ஆடி மாத உற்சவ விபரங்கள்

Every Year Aadi Month Festival
Festival
Festival Details
Aadi First Friday
First Day Festival
Kaapu Katti Kodiyetrrudhal
Saturday
Second Day Festival
Ambaal Coming around the street
Sunday
Third Day Festival
Ambaal Coming around the street
Monday
Fourth Day Festival
Ambaal Coming around the street
Tuesday
Fifth Day Festival
Ambaal Coming around the street in Theruvadaichaan
Wednesday
Six Day Festival
Ambaal Coming around the street
Thrusday
Seventh Day Festival
Kaathavaraayan-Aariyamala Marriage/ Ambaal Coming around the street
Friday
Eighth Day Festival
Ambaal Coming around the street
Saturday
Ninth Day Festival
Ambaal Coming around the street in Muthu Pallakku
Sunday
Tenth Day Festival
Ther Festival
Monday
Eleventh Day Festival
Fire Walking Grand Festival
Tuesday
Twelth Day Festival
Vidaiyattri
Wednesday
Thirteenth Day Festival
Manjal Neer Vilaiyattu